காஞ்சிபுரம் மாவட்டம், ஓழுகோல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 41 வயதுடைய லிங்கேஷ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சுமித்ரா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில் லிங்கேஷ் கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற வந்திருக்கிறார். குடும்பத்தின் செலவிற்காக லிங்கேஷ் தனது நண்பரான சுரேஷ் என்பரிடம் 34,000 ரூபாய் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
கடன் வாங்கி நீண்ட நாட்களாகியும் கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் திருப்பி கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் லிங்கேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் லிங்கேஷ் ஏற்கனவே அடமானம் வைத்த தனது மனைவியின் நகையை மீட்டு, அதை விற்று கடனை செலுத்த முடிவு செய்திருக்கிறார். இதனை அடுத்து லிங்கேஷ் வீட்டிற்கு வந்த சுரேஷ்,அவரது வாகனத்தில் லிங்கேஷை அழைத்து சென்றார்.
பிறகு இருவரும் சென்று அடகு வைத்த நகையை மீட்டு இருக்கின்றனர். அப்போது பொன்னேரிக்கரை அருகே ஜே.ஜே., நகரில், லிங்கேஷுடன் தனது நண்பர்களான சுரேஷ், ரவுடி சரத், சம்பத், தசரதன் ஆகிய நான்கு பேருடன் பேசிக் கொண்டிருந்தார். மேலும் லிங்கேஸ் தனது உறவினரான ராமமூர்த்தி என்பவரை, அங்கு வரவழைத்து அவரிடம் நகையை விற்று பணத்தை எடுத்து வரும்போது கூறியிருக்கிறார்.
நகையை விற்க சென்ற ராமமூர்த்தி திரும்பி வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் உள்ளிட்ட நால்வரும்,லிங்கேஷை தாக்கி, அவரது கழுத்து கால் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த லிங்கேஷ்,காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் உயிரிழந்த லிங்கேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு கொள்ளை செய்துவிட்டு தப்பி சென்ற ரவுடி சரத், தசரதன்,சம்பத் ஆகிய மூன்று பேரையும், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்