கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சரலூர் பகுதியை சேர்நதவர் 55 வயதுடைய ராஜ்குமார். இவர் அவ்வூரின் முன்னாள் ஊர் தலைவராக இருந்துள்ளார். இவரது மகன் நவீன் குமார் படித்து முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் அவரது உறவினர்களான சிலரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர்களும் பணத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் வேலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
மேலும் நவீன் வேலை பற்றி கேட்கும்போது எல்லாம் சரிவர பதில் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் நவீன் “ஒன்னு வேலைக்கு சொல்லுங்க இல்ல நான் குடுத்த பணத்தை கொடுத்து விடுங்கள்” என கூறியுள்ளார். இதனால் நவீன் அவரது உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் செய்துள்ளனர். அடிக்கடி இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வெளியில் சென்ற நவீன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார்.
எனவே நேற்று இரவு தந்தை ராஜ்குமார் மகன் நவீனை தேடி செல்லும் போது அங்கே இருந்த உறவினர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குத்தம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அக்கும்பல் தந்தை ராஜ்குமாரை அடித்து கீழே தள்ளியுள்ளனர். அப்போது அருகிலுள்ள கால்வாயில் ராஜ்குமார் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு கேட்டு உடனடியாக அப்பகுதியினர் ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் போகும் வழியில் அவர் உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து போலீசாருக்கு தெரிவித்துள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ராஜ்குமாரை கொலை செய்த கங்காதரன், சுகுமாரன், பிரபாகரன், தேவேந்திரன் ஆகிய நான்கு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனை தேடி சென்ற தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.