15 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதன் விளைவாக அவர் கர்ப்பமான வழக்கில் தண்டனை பெற்ற 71 வயது குழந்தை பாலியல் குற்றவாளியான ஆசிரியருக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த பாலியல் தாக்குதல்களை ஒப்புக்கொண்டதை அடுத்து, கஜகஸ்தானில் அந்த வன்கொடுமையாளருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் சோவியத் நாடான கஜகஸ்தானின் சட்டத்தின்படி, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகளுக்கு இரசாயன ஆண்மை நீக்கம் அனுமதிக்கப்படுகிறது.
துர்கிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமத்தில், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பெற்றோர் இல்லாத நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண் தனது தங்கையுடன் தனியாக இருந்த சமயத்தில் வீட்டிற்குள் அந்த வயதான ஆசிரியர் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அந்த 15 வயது சிறுமியை துன்புறுத்தியதால் அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அச்சிறுமி தனது ஏழாவது மாதத்தில்தான், தான் கருவுற்றிருப்பதையே உணர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவளும் அவளது தாயாரும் பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது முறைப்படி புகார் அளித்தனர். இறுதியில் அஸ்தானா தலைநகரில் குழந்தையைப் பெற்றெடுத்தாள். "பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை அச்சுறுத்தலுடன் குடியிருப்பு வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைதல்" ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றம் 71 வயது ஆசிரியருக்கு தண்டனை வழங்கியது. அவருக்கு 15 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நபர், ஆசிரியர் பதவிகளை வகிப்பதிலிருந்தோ அல்லது சிறார்களுடன் தொடர்புடைய எந்தவொரு தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்தோ நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளார் என்று அறிக்கையையும் வெளியிட்டது.
இதையடுத்து, சிறையில் உள்ள பாலியல் குற்றவாளியின் குடும்பம் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். கஜகஸ்தானின் சட்டக் கட்டமைப்பு, பாலியல் குற்றவாளிகள் சிறையில் இருக்கும்போது, குறிப்பாக அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், கஜகஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் இரக்கமற்ற முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து பாலியல் குற்றவாளிகளுக்கு கட்டாய இரசாயன ஆண்மை நீக்கம் செய்வது அந்நாட்டில் அதிகரித்துள்ளது. மேலும், கஜகஸ்தானிய சிறைச்சாலையின் மருத்துவப் பிரிவில், 70 வயதுகளில் உள்ள செவிலியரான ஸோயா மனேன்கோ, தண்டனை பெற்ற ஒரு குழந்தைப் பாலியல் குற்றவாளிக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கும் செயல்முறையைச் செய்வதை ஒரு புகைப்படம் எடுத்துப் பதிவு செய்துள்ளார். மேலும், சிறைவாசத்திலிருந்து விடுதலையான, அடையாளம் காணப்பட்ட மற்றும் அவமானப்படுத்தப்பட்ட குழந்தைப் பாலியல் குற்றவாளிகளின் வசிப்பிடங்களைக் காட்டும் வரைபடங்களை கஜகஸ்தான் அரசு பகிரங்கமாக மக்கள் மத்தியில் பகிர்ந்து கொள்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.