couple  
க்ரைம்

சமூக வலைதளங்களில் ‘Dream Couple’... திடீரென மாயமான மனைவி.. பிரபல இன்ஃப்ளூயன்சர் வாழ்க்கையில் நடந்தது என்ன?

அவருக்கு ஏற்கனவே சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக புகார்கள் இருந்ததாகவும்...

Mahalakshmi Somasundaram

கேரள சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட பிரபல இன்ஃப்ளூயன்சர் ஜோடியாக அகில் - மேகா தம்பதி வலம் வந்தனர். ஒரே தெருவில் வசித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் தங்களது குடும்ப வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தனர். இதனால் சமூக வலைதள ரசிகர்கள் மத்தியில் ‘dream  jodi’ என்ற பெயரையும் பெற்றிருந்தனர். ஆனால், தற்போது இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அகிலின் மனைவி மேகாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது மேகா வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு, நள்ளிரவில் உள்ளூர் பேருந்து ஓட்டுநர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மேகா அந்த பேருந்து ஓட்டுநருடன் சென்றது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த ஓட்டுநருக்கு சமீபத்தில் அரசு பணி கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு ஏற்கனவே சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக புகார்கள் இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

இதனிடையே, மேகா சமூக வலைதளத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கியதாக கூறப்படும் வீடியோவும் தற்போது பேசு பொருளாகி உள்ளது. அதில், தனது கணவர் அகில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதுவே வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், அகில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர், சமூக வலைதளங்களில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டி வந்ததாக கூறப்படுகிறது. 

மாதம் சுமார் ரூ.10 லட்சம் வரை வருமானம் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்திருந்தாலும், அகில் அமைதியாக  விவகாரத்தை கையாள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், மேகாவை பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம் என்றும் அவர் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியான தம்பதியாக வலம் வந்த அகில் - மேகா ஜோடியின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த விவகாரம் தற்போது கேரளாவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து போலீசாரின் விசாரணை மற்றும் இருதரப்பினரின் அதிகாரப்பூர்வ விளக்கங்களுக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்