க்ரைம்

“சடலத்துடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட கொடூரம்!” - நண்பனை சுத்தியால் அடித்து கொன்ற அண்ணன் தம்பி

தலைமறைவான குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்

Muthu Lakshmi

கோவை பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதி, சிக்கலாம் பாளையம் உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. கட்டிட தொழிலாளியான இவரது மகன் அஸ்வின் (22). நேற்று இரவு அஸ்வின் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த, செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ் (16) மற்றும் மாதேஷ் (22), ஆகிய விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று மது அருந்தியுள்ளனர். 

அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் தகராறு மூண்டு அதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் தம்பிகளான, தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, அதிகாலை 01.45 மணிக்கு தங்களது நண்பரான அஸ்வினை சுத்தியால் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்து அறுத்தும் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். ரத்தவெள்ளத்தில் கிடந்தஅஸ்வினை பார்த்து பதறி போன ஊர் மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஸ்வின் பிரேதத்தை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து, தலைமறைவான குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை, சுத்தியால் அடித்து, கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம், கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.