க்ரைம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள்… நாளை மீண்டும் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Malaimurasu Seithigal TV
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கடந்த மாதம் 27ம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, கூடுதல் விசாரணைக்கு அனுமதி கேட்டு காவல்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, தனிப்படை அமைத்து, மறு விசாரணையானது உதகையில் உள்ள பழைய எஸ்.பி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
சுமார் 33 நாட்கள் நடைபெற்ற இந்த புலன் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 6 பேரிடமும், வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 40 க்கும் மேற்பட்டவர்கள், 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த வழக்கு நாளை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு முன் விசாரணைக்கு வருகிறது. அப்போது விசாரணையின் அனைத்து வாக்குமூலங்களும் நீதிபதி முன் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி அரசு தரப்பில் கோரப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.