க்ரைம்

“14 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பலாத்காரம்” - டியூஷன் சென்று வந்த மாணவியை கடத்திய வாலிபர்கள்.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்!

சிறுமி அடையாளம் காட்டிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சிறுமியை..

Mahalakshmi Somasundaram

கொல்கத்தா மாநிலம், பர்கானா மாவட்டம் டம் டம் பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் சிறுமியின் பெற்றோர்கள் டியூஷன் சேர்த்து விட்டுள்ளனர். தினம்தோறும் பள்ளியை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் சிறுமி மாலை ஆறு மணிக்கு டியூஷனுக்கு சென்று மீண்டும் 8 மணியளவில் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருத்துள்ளார். அதே போல கடந்த சனிக்கிழமை மாலை பழியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமி 6 மணியளவில் டியூஷனுக்கு சென்றிருக்கிறார்.

பின்னர் டியூஷன் முடித்துவிட்டு மீண்டும் திரும்பும் போது வழியில் உள்ள பூங்காவில் இருந்த வந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் பேசிக்கொடுத்துள்ளார். சிறுமி அவரிடம் பேசிக்கொடுக்காமல் நடந்து சென்ற நிலையில் அதே வழியில் வந்த மேலும் இருவர் சிறுமியை வழிமறித்து உள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று மோதிலால் காலனியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மூவரும் குடிபோதையில் இருந்ததால் அவர்களிடமிருந்து தப்பிய சிறுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

சிறுமியின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், நடந்த சம்பவம் குறித்து சிறுமியை அழைத்துச் சென்று காவல் துறையில் புகாரளித்துள்ளனர். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சிறுமியை நேரடியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் சிறுமி அடையாளம் காட்டிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர். டியூஷன் சென்ற வந்த சிறுமியை மூவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை கொடுக்க காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.