திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிகாமணி வயது 47, இவர் துபையில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். அவ்வப்போது குடும்பத்தை பார்க்க திருவாரூர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் கடைசியில் “உங்களை பார்க்க வீட்டுக்கு வரேன்” என சிகாமணி தனது மனைவி பிரியாவிடம் (ஏப்ரல் 24) தேதி போனில் கூறியுள்ளார். அதன் பிறகு சிகாமணியின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பிரியா தனது கணவரை, போனில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்துள்ளார்.பிறகு துபையில் உள்ள அவரது டிராவல்ஸ் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, சிகாமணி (ஏப்ரல் 21) ஆம் தேதி இந்தியாவிற்கு வந்ததை பிரியா அறிந்து கொண்டார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரியாவிற்கு, தனது கணவருக்கும் கோவையை சேர்ந்த சாராத என்ற பெண்ணிற்கும். இருந்த தகாத உறவு பற்றி பிரியாவிற்கு நினைவு வந்திருக்கிறது.எனவே தனது கணவர் சாராத வீட்டிற்கு தான் சென்றிருப்பார் என சந்தேகம் அடைந்த பிரியா, பீளமேடு காவல் துறையில் “ துபையில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்த தனது கணவரை காணவில்லை” என புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். சிகாமணியின் கள்ள காதலி, சாரதாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர்.அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.இதை அறிந்த சாரதாவின் தந்தை இரண்டு வக்கீல்களுடன் சென்று நீதிமன்றத்தில் “நான் தான் சிகாமணியை கொலை செய்தேன்” என சரணடைந்துள்ளார்.
பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரித்த போலீசாரிடம். “சாரதாவும் சிகாமணியும் துபையில் வீடு எடுத்து தங்கி, கணவன் மனைவி போல வாழ்ந்தனர். அப்போது சாராத, சிகாமணியிடம் 6 லட்சம் பணம் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே கோபம் அடைந்த சாராத கோவை வந்தார்.
அவரை சமாதானப்படுத்த சிகாமணியும் கோவை வந்ததை அடுத்து, சிகாமணியை நாங்கள் குடும்பத்துடன் விமான நிலையம் சென்று வரவேற்றோம். பின்னர் அவரை கொலை செய்ய நினைத்து, நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி பசுபதி பாண்டியன், கூட்டாளி குட்டி தங்கம் ஆகியவர்களை கோவைக்கு வரவழைத்தோம்.
பின்னர் சிகாமணிக்கு தடபுடலாக சமைத்து விருந்து வைத்து, அன்று இரவு நானும் குட்டி தங்கமும் சிகாமணிக்கு தூக்க மாத்திரைகள் கலந்த பீரையும், இறைச்சியையும் கொடுத்தோம். அதனை அருந்தி சிகாமணி மயக்கம் அடைந்ததும் சாராத, சிகாமணியை சரமாரியாக தாக்கினர்.
இதனால் இறந்த சிகாமணியை நாங்கள் மூவரும் சேர்ந்து, காரில் ஏற்றி கரூர் பொண்ணமராவதி பகுதிக்கு சென்று. அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசி விட்டு. அங்கு இருந்து திருச்சி புறப்பட்டு சென்று சாரதாவை விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைத்தோம்.பின்னர் நானும் குட்டி தங்கமும் வேறு வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டோம்” என போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
ஏற்கனவே சாரதாவின் கணவர் குணவேலை, சாரதாவிடம் அடிக்கடி தகராறு செய்கிறார். என்ற காரணத்திற்காக, தியாகராஜன் 2016 ஆம் ஆண்டு கொன்று, காவல் துறையால் கைது செய்யப்பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தியாகராஜன் சாரதாவின் உண்மையான தந்தை இல்லை என்பதும். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த தியாகராஜனுக்கும். சாரதாவின் அம்மாவான அதே பகுதியை சேர்ந்த கோமதிக்கு கள்ள காதல் ஏற்பட்டு, கோமதி மற்றும் அவரது இரண்டு மகள்களுடன் தியாகராஜன் குடும்பமாக வாழ்ந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்