koyambedu school bus driver arrest Admin
க்ரைம்

"6-வது படிக்கும் குழந்தையிடம்... I love you சொன்ன டிரைவர்?" - அடக்கடவுளே!

இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

Anbarasan

சென்னை கோயம்பேடு பகுதியை சார்ந்த பெண் ஒருவர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அந்த புகாரில் அவருடைய மகள் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருவதாகவும், தனது மகள் தினம் தோறும் பள்ளிக்கு, பள்ளி வாகனத்திலேயே சென்றுவருவர் அந்த பேருந்தை ஓட்டும் ஓட்டுநர் எனது மகளுக்கு தின்தோறும் சாக்லேட்களை வாங்கிக்கொடுத்து குழந்தையுடன் பழகியுள்ளார்.

சிலநாட்களுக்கு பிறகு குழந்தையிடம் "நான் உன்னை காதலிக்கிறேன் நல்ல பாத்துக்குவேன்" என ஆசைவார்த்தைகளை காட்டியுள்ளார், அவ்வப்போது போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார், இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டிற்கு வந்த வினோத் சிறுமியை நிர்வாணமாக்கி தவறாக நடந்துகொண்டுள்ளார், மேலும் இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்த சிறுமி இதை யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார், பின்னர் இதுகுறித்து நேற்று ஒரு உறவினரிடம் சிறுமி கூறியதை அடுத்து இதை பற்றி தெரிந்துகொண்ட சிறுமியின் தாய் புகார் தெரிவிக்க வந்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார், பள்ளி பேருந்து ஓட்டுநர் வினோத் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்