கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். நேற்று அதிகாலை இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது கார் காணாமல் போனதை அடுத்து கிருஷ்ணன் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை ஏற்று விசாரிக்க தொடங்கிய குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரிக்க தொடங்கியுள்ளார்.
ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் வந்த மூன்று கொள்ளையர்கள் காரை திருடிக்கொண்டு ஒருவர் கார் ஓட்ட மற்றவர்கள் கன்டெய்னர்களில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். சுங்க சாவடிகளில் இருந்த கேமராக்களை பரிசோதனை செய்த போலீசார் அந்த கண்டெய்னர் “தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி வழியாக கோவை சென்று எர்ணாகுளம்” சென்றதை அறிந்த காவல் துறையினர் இந்த கண்டெய்னர் லாரி குறித்து கேரள போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு போலீசாரின் தகவல் அறிந்து விரைந்து செயல்பட்ட கேரள போலீசார் எர்ணாகுளத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த ராஜஸ்தான் கண்டெய்னர் லாரியை கைப்பற்றினர். மேலும் அதிலிருந்து மூன்று குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்கள் ஏ.டி.எம் இயந்திரங்களை கொள்ளையடிக்க வைத்திருந்த வெல்டிங் உபகாரணகள், கேஸ் சிலிண்டர்கள் போன்றவற்றை கைப்பற்றினர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மேவாக் கொள்ளையர்கள் பாணியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள ஏ.டி.எம் - களில் கொள்ளையடிக்க திட்டம் போட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கொள்ளையர்களை தமிழகம் அழைத்து வந்து விசாரிப்பதற்காக கிருஷ்ணகிரி போலீசார் கேரளா எர்ணாகுளத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் தமிழக காவல்துறை அளித்த தகவலின் படி விரைந்து செயல்பட்ட கேரளா போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழக காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.