க்ரைம்

“ஓசியில் மீன் கொடுக்காத உரிமையாளர் கொலை” - கூலி தொழிலாளி செய்த பயங்கரம்.. அதிகாலை கடையில் கேட்ட அலறல் சத்தம்!

வெளியேற நினைத்த போது கடையின் உரிமையாளரான நஞ்சம்மாள் அவரை பிடித்து சாப்பிட மீனிற்கான...

Mahalakshmi Somasundaram

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் சுண்டேகுப்பத்தை சேர்ந்தவர் 35 வயதுடைய மாரியப்பன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கூலித்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடைய மாரியப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது எனவே அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பன் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு மது அருந்திய மாரியப்பன் நாசாகால்கொட்டாய் பகுதியில் உள்ள நஞ்சம்மாள் என்பவரது கடைக்கு மீன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் மீன் வாங்கி சாப்பிட்ட மாரியப்பன் பணம் கொடுக்காமல் அங்கிருந்து வெளியேற நினைத்த போது கடையின் உரிமையாளரான நஞ்சம்மாள் அவரை பிடித்து சாப்பிட மீனிற்கான பணத்தை கேட்டுள்ளார். அதற்கு மாரியப்பன் பணம் தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கடையில் இருந்த பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவரை சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர். இதனையடுத்து கடையை விட்டு வெளியேறிய மாரியப்பன் அருகில் இருந்த கடையின் வாசலில் படுத்து உறங்கியுள்ளார். பின்னர் மீண்டும் அதிகாலை மது குடிக்க சென்று கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த நஞ்சம்மாள் தனக்கு பணம் தராமல் ஏமாற்றி சென்ற ஆத்திரத்தில் அப்பகுதியில் இருந்த கட்டையை எடுத்து மாரியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் நஞ்சம்மாளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

காலை விடிந்தது நஞ்சம்மாளின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த நாசம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாரியப்பன் நாசம்மாளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.