மத்திய பிரதேசம் மாநிலம் போபால் அருகே, ஒரு இளம் பெண்ணுடனான காதல் உறவின் காரணமாக, அப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரால் கூலி படை ஏவி கொலை செய்துவிட்டு விபத்து நடந்ததுபோல் சித்தரிக்க முயன்றுள்ளனர்.
காதலியின் தந்தையால் ரூ.10 லட்சத்திற்கு கூலிக்கு அமர்த்தப்பட்ட நான்கு நபர்களால் 20 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என பாலகாட் மாவட்டத்தில் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்தக் கொலையை ஒரு சாலை விபத்துபோல அரங்கேற்றியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் உட்பட ஐந்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் ஒரு சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
நஹர்வானி கிராமத்தைச் சேர்ந்த ரியான்ஷ் சௌஹான், கடந்த நவம்பர் 17 அன்று லோஹரா-பரசபானி சாலையில் உள்ள பந்தா தலாப் அருகே தனது ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட தகவல்களில் இது ஒரு 'சாலை விபத்து' என கூறப்பட்டது. ஆனால் அவரது உடலின் நிலையும், சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களும் சந்தேகத்தை காவல்துறைக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இது ஒரு 'கொலை' என உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் விசாரணை ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து நாள் விசாரணை இந்த விவகாரத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ரியான்ஷ் தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததையும், அப்பெண்ணின் தந்தை ஜீவன் பாட்லே மற்றும் சகோதரர் அஷுதோஷ் பாட்லே ஆகியோர் அந்த உறவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக ரியான்ஷுக்கும் அஷுதோஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இந்தப் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியிருந்தது. அந்த பெண்ணின் சகோதரனான அஷுதோஷ் ரியான்ஷுவை கொலையை செய்ய திட்டமிட்டு, அதைச் செய்து முடிப்பதற்காக நான்கு பேருக்கு தலா 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன் பின்னர், நவம்பர் 16-ம் தேதி இரவு, பரசபானி கிராமத்தில் நடந்த ஒரு திருவிழாவிலிருந்து ரியான்ஷை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நட்பாக பேசி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அவரை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, மதுபானம் கொடுத்து, அவரது தலையின் பின்பகுதியில் இரும்புக் கோணியால் பலமுறை தாக்கி கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
கொலையை மறைக்க இது ஒரு விபத்து என்றும், இது தற்செயலாக நடந்தது என்பது போல் காட்டுவதற்காக, அவர்கள் ரியான்ஷுவின் உடலை சாலையோரத்தில் இருந்த அவரது ஸ்கூட்டருக்கு அருகில் வைத்ததாகக் கூறப்படுகிறது. குற்றத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அணிந்திருந்ததாகக் கூறப்படும் ஆடைகள், கைபேசிகள் மற்றும் பிற ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியுள்ளது. குற்றச் சதி மற்றும் சாட்சியங்களை அழித்தல் தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதையின் (பி.என்.எஸ்) கூடுதல் பிரிவுகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை விளக்கப்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்