க்ரைம்

சாலையின் குறுக்கே படுத்து மறியல்...! விசிக ஒன்றிய செயலாளர் கைது...!!

Malaimurasu Seithigal TV

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு, பெரிய தெரு பகுதியில் போக்குவரத்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  விசிக தொகுதி செயலாளர் சாலையில் படுத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால்  கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம், பாரதி நகர் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் என்ற நபர் பட்டுக்கோட்டை பெரிய தெரு,  மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதால்  அவருக்கும் போக்குவரத்து காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியை காவல்துறை ஊழியர் எடுத்துள்ளார். 

தனது பைக் சாவியை காவல்துறை அதிகாரி ஊழியர் ஆத்திரத்தில்  சாலையின் குறுக்கே படுத்து அரவிந்த்குமார் சாலை மறியல் செய்துள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  பேராவூரணி சட்டமன்ற தொகுதி செயலாளர் என்று கூறப்படுகிறது.

மேலும், சாலையின் குறுக்கே படுத்து சாலை மறியல் செய்து,  காவல்துறையினர் பற்றி தர குறைவாக பேசி, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல்,  அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தலைமை காவலர் இளவரசன் கொடுத்த புகாரின் பெயரில், பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், அரவிந்த் குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் நீதிமன்ற காவலில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.