Nalasopara crime news 
க்ரைம்

திருமண வாக்குறுதி அளித்து பலமுறை உடலுறவு! - 70–80 பெண்களின் அந்தரங்க வீடியோக்கள்.. வெளிநாட்டு ஆபாச தளத்தில் விற்பனையா?

ஆரிஃபும் அவரது தாயாரும் தன்னை மதம் மாறுமாறு வற்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாகத் தாக்கியதாகவும் அந்த பெண் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

Vinvizhi Leninton

மகாராஷ்டிராவின் நாலசோபாரா பகுதியில், திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண் மீது மீண்டும் மீண்டும் பாலியல் ரீதியான சுரண்டல் நடத்தப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. மேலும், அந்த நபர் காதல் வலையில் பல பெண்களை விழவைத்ததாகவும் அவர்களது அந்தரங்க வீடியோக்களை வெளிநாட்டு ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்ததாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் சேர்ந்து வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், நாலசோபாராவில் 22 வயதான ஆரிஃப் அயூப் ஷேக் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு கடுமையான வழக்குகள் தொடர்பான விசாரணையானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வசாய் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை அக்டோபர் 16 வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் வெளிக்கொணர, கைபேசிகள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி கூடத்தில் ஆரிஃப் அயூப் ஷேக்-கை 23 வயது பெண் ஒருவர் சந்தித்து அறிமுகமாகியுள்ளார். அங்கு இருவருக்கும் ஒரு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது காதல் வலையில் அந்த பெண்ணை விழவைத்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவில் பலமுறை ஈடுபட்டதாக அந்த பெண் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். பின்னர், ஆரிஃபும் அவரது தாயாரும் தன்னை மதம் மாறுமாறு வற்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாகத் தாக்கியதாகவும் அந்த பெண் மேலும் குற்றம் சாட்டினார். ஆரிஃபின் உறவினரான சாஹில், தன்னைப் பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் பின்னர், ஆரிஃபின் கைபேசியில், அவர் பல பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபடும் காணொளிகளையும் அந்த பெண் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் உள்ளூர் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) நிர்வாகிகளை அணுகியதுடன், திங்கள்கிழமை இரவு நாலசோபாரா காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது குற்றம்:

ஆரிஃபின் கைபேசியில் இருந்து 70 - 80 பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்ட வீடியோக்களில் சிலவற்றை அவர் டெலிட் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும், அந்த வீடியோக்களை வெளிநாட்டு இணையதளத்திற்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் டிஜிட்டல் வலையமைப்புகள் மற்றும் தொடர்புகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். போனில் இருந்து மீட்கப்பட்ட தரவுகளுக்கு தடயவியல் பகுப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நவராத்திரி கொண்டாட்டங்களின் போது இந்துப் பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நாலசோபாரா போலீசார் ஞாயிற்றுக்கிழமை ஆரிஃப் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அவர் பேசிய அந்த ஆட்சேபனைக்குரிய வீடியோ குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.