Sexual abuse allegations 
க்ரைம்

"காப்பகங்களில் உள்ள குழந்தைகளை சீரழித்த கொடூரன்!" 1 வயது முதல் 18 வயது வரை - 8 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் வன்கொடுமை

பிராங்க்ஸ் என்ற குழந்தைகள் காப்பகங்களில் பாதிக்கப்பட்டவர்களைத் தன் வசப்படுத்தி, அவர்களை பாலியல் வன்கொடுமை..

Vinvizhi Leninton

காப்பகங்களில் உள்ள குழந்தைகளைச் சந்தித்த பிறகு அவர்களை, எட்டு ஆண்டு காலத்திற்குள் பல குழந்தைகளைக் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க் நகர காவல்துறையின் தகவல்படி, 42 வயதான ஸ்டீபன் சார்லஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிடிபட்டுள்ளார். ஜனவரி 1, 2018 முதல் மே 5, 2026 வரை ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இவர் மீது ஆறு பாலியல் பலாத்காரக் குற்றங்கள் மற்றும் ஐந்து கொடூரமான பாலியல் தாக்குதல் குற்றங்கள் உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. சார்லஸ், பிராங்க்ஸின் மோரிஸ் ஹைட்ஸ், பேசெஸ்டர் மற்றும் சவுண்ட்வியூ பகுதிகளில் உள்ள வீடுகளில் பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு, பிராங்க்ஸ் என்ற குழந்தைகள் காப்பகங்களில் பாதிக்கப்பட்டவர்களைத் தன் வசப்படுத்தி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 10, 11, 13 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், சார்லஸ் 13 வயது சிறுமியையும், 18 வயது ஆணையும் கூட பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் சார்லஸின் உறவினர் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் இந்தக் கொடுமை குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் அதன் பெயரில் வருடக்கணக்கில் நிகழ்ந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சார்லஸை தேடிக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அதன் பெயரில் ஒரு நாள் கழித்து, அந்த குற்றவாளி நியூயார்க் நகர காவல்துறையால் பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, சார்லஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.