க்ரைம்

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது...

Malaimurasu Seithigal TV

மயிலாடுதுறை | வைத்தீஸ்வரன் கோவிலில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 18ம் தேதி வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருப்பங்கூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்த 20 வயதாகும் காளிதாஸ் என்பவர் அழைத்து சென்று தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர், சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காளிதாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.