son killed his father 
க்ரைம்

“குடிபோதையில் மருமகளை ஆபாசமாக பேசிய மாமனார்..” ஆத்திரத்தில் மகன் செய்த வெறிச்செயல்!!

அப்போது வீட்டில் கட்டிலில் படுத்திருந்த தந்தை முருகனிடம் மகன் பாலசுப்பிரமணியன் “நீ ஏன் இப்படி குடித்துவிட்டு அடிக்கடி...

மாலை முரசு செய்தி குழு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வட்டாலூர் மேலத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 61) மனைவி சாந்தி, மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகனை தவிர அனைவருக்கு திருமணம் 

ஆகிவிட்டது. முருகன் ஆலங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். 

இவரது மூத்த மகன் பாலசுப்பிரமணியன் (வயது 35) குற்றாலத்தில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். தந்தை முருகன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் மனைவி மற்றும் மகன், மருமகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு முருகன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அவரது மனைவி மற்றும் மருமகளிடம் ஆபாசமாகவும், தரக்குறைவாக பேசி, தகராறில் ஈடுபட்டு மனைவி மருமகள் பேரக்குழந்தைகள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கோபத்தில் பூலாங்குளத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். மருமகளும் பேரக் குழந்தைகளும் பக்கத்து வீட்டில் இருந்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த பாலசுப்பிரமணியன்  தந்தை மீது கடும் கோபத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் கட்டிலில் படுத்திருந்த தந்தை முருகனிடம் மகன் பாலசுப்பிரமணியன் “நீ ஏன் இப்படி குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்கிறாய்?” என்று தட்டி கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலசுப்பிரமணியன் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து அவரது தந்தையான முருகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் தனது தந்தையை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இது பற்றி பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் உதவி ஆய்வாளர் பட்டுராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பாவூர்சத்திரம் போலீசார் தந்தையை வெட்டிக்கொலை செய்த பாலசுப்பிரமணியனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவத்தால் வட்டாலூர் கிராமத்தில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.