க்ரைம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை

சேலத்தில் சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Malaimurasu Seithigal TV

சேலத்தில் சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சேலம் மாவட்டம், ஆரூர்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் குமாருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து குமார் கோவை மத்திய சிறையில் குமார் அடைக்கப்பட்டார்.