க்ரைம்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி.. மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை” - 5 மாத கர்ப்பத்தால் நிலைக்குலைந்த குடும்பம்!

தொடர்ந்து மாணவி வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பங்களில் மாணவியை மிரட்டி

Muthu Lakshmi

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே 12ம் வகுப்பு மாணவி ஒருவர் கர்ப்பமான சம்பவத்தில் கூலி தொழிலாளி  போக்சோ வழக்கில் கைது. பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி  பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியின் 16 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம்  அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் என்பவர் மாணவியின்  வீட்டிற்கு சென்று அவளை கட்டாயப்படுத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னரும் தொடர்ந்து மாணவி வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பங்களில் மாணவியை மிரட்டி, மிரட்டி வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து  மாணவிக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது, இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்தார் புகாரின் பேரில்,

மகளிர் போலீசார்  போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  முருகனை கைது செய்து பாலக்கோடு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். முதியவர் பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி கர்ப்பமாக்கிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்