murder case 
க்ரைம்

சகோதரனை செருப்பு தைக்கும் கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்…! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!!

அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரிக்கு எதிரில் நடைப்பாதையில் செருப்பு தைக்கும் கடை நடத்தி வந்தார். ...

Saleth stephi graph

தொழில் போட்டியில் சகோதரனை செருப்பு தைக்கும் கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி இருதயம் என்ற ஆனந்த்.

இவர்  அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரிக்கு எதிரில்  நடைப்பாதையில் செருப்பு தைக்கும் கடை நடத்தி வந்தார். இக்கடைக்கு எதிராக அவருடைய தம்பி லூர்துசாமியும் செருப்பு தைக்கும் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில்  இருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் போட்டியில் கடந்த 2021 ம் ஆண்டு  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த இருதயம் தன் கையில் வைத்திருந்த செருப்பு தைப்பதற்கான கத்தியால் கழுத்தில் குத்தியதில் லூர்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக அண்ணாநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருதயத்தை கைது செய்தது.

இது தொடர்பான வழக்கினை விசாரித்த, அல்லிகுளம் வளாகத்தில் உள்ள, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தோத்திரமேரி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆனந்திற்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.