கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகேயுள்ள புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணியரசு - சிந்து தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில் 9 மாத அள்ளம் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சிந்துவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனிடையே வயிற்று வலி அதிகமானதால் சிந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.