க்ரைம்

கணக்கு வழக்குகள் பார்ப்பதில் கைகலப்பு.. கோவில் நிர்வாகிக்கு கத்திக்குத்து.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

நெல்லை மாவட்ட எல்லையான பணகுடி அருகே வடக்கன் குளத்தில்  உள்ள விநாயகர் கோவில் நிர்வாக துணை செயலாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suaif Arsath

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன் குளத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் ராஜபாண்டி. இவர் அதே பகுதியில் உள்ள அதிசய விநாயகர் கோவிலின் துணை செயலாளராக இருந்து வருகிறார்.

கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் தலைவராக இருக்கும் மகேந்திர பூபதி என்ற  சம்பத் மற்றும் ராஜகுமரன் ஆகியோர் உதவி செயலாளர் வெங்கடேஷ் ராஜபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கோவில் கணக்கு வழக்கு  பார்ப்பதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் வெங்கடேஷ் ராஜ பாண்டி கத்தியால்  குத்தப்பட்டுள்ளார். வெங்கடேஷ் ராஜபாண்டி வடக்கன் குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் ராஜாவை  2 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  வெங்கடேஷ் ராஜபாண்டியின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால் கொலையாளிகள பிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.