க்ரைம்

மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை... தவறாக நடந்து கொண்ட தமையன்...!!

Malaimurasu Seithigal TV

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரக்கல் புதூர் பருவம் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். வெல்டிங் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகியுள்ளது. 

ஆனால் அவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து தனியே வசித்து வந்தார் சதீஷ்குமார்.  இந்த நிலையில் தன் வீட்டின் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சித்தப்பா மகளை அவ்வப்போது பார்த்து வருவது இவரது வழக்கம். 

மனைவி இல்லாத சதீஷ்குமார், தங்கை என்றும் பாராமல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.  அதோடு இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

தனக்கு நடப்பது என்ன என்பது கூட தெரியாமல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணும், செய்வதறியாது திகைத்தார்.  இந்நிலையில் கடந்த வாரம் வழக்கம் போல அத்துமீறலில் ஈடுபட்டபோது பெற்றோரிடம் கையும் களவுமாய் சிக்கிக் கொண்டார். 

இதையடுத்து மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சதீஷ்குமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.