க்ரைம்

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

Malaimurasu Seithigal TV

செந்தில்பாலாஜியிடம்  அமலாக்கத்துறையினரின் விரசாணை காவல் இன்றுடன் முடிவடைவதையொட்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை  தள்ளுபடி செய்து, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனுத் தாக்கல்  செய்யப்பட்டது. பின்னர், முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், இன்றுடன் அமலாக்கத்துறை காவல் முடிவடந்தது. இதனையொட்டி மீண்டும் செந்தில்பாலாஜி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முன்பு அல்லது ஆஜர்படுத்தப்பட்டார். இதனிடையே மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.