Nilgiris crime news 
க்ரைம்

4 வருடங்களாக மகளை சீரழித்த தந்தை! போதையில் கண்டும் காணாமல் இருந்த தாய் - பயத்தின் உச்சத்தால் சிறுமி செய்த செயல்

பள்ளி விடுமுறையின் போது, சிறுமிக்கு அவரது வளர்ப்பு தந்தையான நடராஜ் கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Vinvizhi Leninton

நீலகிரி மாவட்டம், பில்லூர்மட்டம் அடுத்துள்ள சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி ராகினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காணாமல் போனதாகக் கூறி, கடந்த 3-ம் தேதியன்று 'சைல்டு ஹெல்ப் லைன்' மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின்னர், இது குறித்து கொலக்கொம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கொலக்கொம்பை போலீசார் சிறுமியை தேடி மீட்டு, நேற்று முன்தினம் உதகை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின்னர், போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், சிறுமியின் தந்தை ராமன் (50) குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தாயார் ராணி (47) என்பவர் நடராஜ் (55) என்ற நபருடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பள்ளி விடுமுறையின் போது, சிறுமிக்கு அவரது வளர்ப்பு தந்தையான நடராஜ் கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் வளர்ப்பு தந்தை நடராஜ். ​இந்த விவகாரம் குறித்து, சிறுமி தன் தாயார் ராணியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், நடராஜ் குடும்பச் செலவுக்கு கூடுதலான பணம் கொடுத்து வந்ததாலும், தாயாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாலும் அவர் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துவந்துள்ளார்.

சிறுமி கூறிய புகாரின் பேரில், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன்பானு, சிறப்பு உதவி ஆய்வாளர் வசந்தகுமாரி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரது வளர்ப்பு தந்தை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் வளர்ப்பு தந்தை நடராஜ் மற்றும் உடந்தையாக இருந்த தாய் ராணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடராஜ் உதகை கிளை சிறையிலும், அவரது மனைவி ராணி கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மகள் என்றும் பாராமல் வளர்ப்பு தந்தையே இவ்வாறு நடந்து கொண்டதும் அவரது தாய் இதனை கண்டும் காணாமல் இருந்துவந்ததும் குன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.