Minor Girl Trafficking Case Kerala 
க்ரைம்

அடுத்தடுத்த மாநிலங்களுக்கு அழைத்து சென்று சீரழிக்கப்பட்ட சிறுமி.. “கேரளா ஸ்பாவில் வெளியான உண்மை” - 16 வயதில் இவ்வளவு கொடுமையா?

சிறுமி உறவினர்களால் விற்கப்பட்டு ஸ்பாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது...

Mahalakshmi Somasundaram

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி தனது தாய் தந்தை உயிரிழந்த நிலையில் அவரது தந்தையின் சகோதரியான அத்தை மற்றும் அவரது கணவர் பாதுகாப்பில் வளர்ந்து வந்திருக்கிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமியின் வயதை ஆதார் அட்டையில் 20 என மாற்றி கேரளாவுக்கு அழைத்து சென்று கோவளம் பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவில் விற்றதாக சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து 47 வயதுடைய சஞ்சித் குமார் என்பவருக்கு சொந்தமான ஸ்பாவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்.

பின்னர் பூவார் பகுதியில் உள்ள 46 வயதுடைய நிஷாந்த் என்பவரது ஸ்பாவிற்கு மாற்றப்பட்டு அங்கு பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டுள்ளார். அப்போது சிறுமிக்கு அங்கு பணிபுரியும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. நாளடைவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அதிகரித்த நிலையில் அங்கிருந்து தப்பிக்க நினைத்த சிறுமி வாலிபருடன் சேர்ந்து அங்கிருந்து வெளியுள்ளார். இதனை அறிந்த ஸ்பாவின் உரிமையாளர் நிஷாந்த் இது குறித்து சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கோவளம் சென்ற உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகாரளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வீசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிறுமியை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் சிறுமி உறவினர்களால் விற்கப்பட்டு ஸ்பாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் சிறுமியின் உறவினரான அத்தை மாமா மற்றும் ஸ்பாவின் மேலாளர்கள் நிஷாத், சஞ்சித் குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை அவரது உறவினர்கள் ஜூலை மாதம் கேரளா அழைத்து செல்வதற்கு முன்பு சிறுமி சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஸ்பாவிலும் மற்றும் ஹைதராபாத் பகுதியில் உள்ள ஸ்பாவிலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே போலீசார் கூடுவாஞ்சேரி மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.