க்ரைம்

மீரா மிதுனுக்கு  ஆகஸ்ட்  27 ம் தேதி  வரை நீதிமன்ற காவல்...

பட்டியலின சமூகத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனுக்கு  ஆகஸ்ட்  27 ம் தேதி  வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

Malaimurasu Seithigal TV

பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் நடிகை மீரா மிதுன் இழிவாகப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் கேரளாவில் பதுங்கி இருந்த மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து கேரளாவில் இருந்து மீரா மிதுன் தனி வேன் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது.இந்நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரா மிதுன் சைதாப்பேட்டை  குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆகஸ்ட்  27 ம் தேதி  வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.