க்ரைம்

சம்பளம் கேட்டதால் ஓட்டுநர், கிளீனர்களை துப்பாக்கியால் சுட்ட உரிமையாளர்

கர்நாடக மாநிலம் மங்களூரில் சம்பளம் கேட்டு தகராறு செய்தவர்களை தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த குண்டு குறி தவறி மகனின் தலையை துளைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் மங்களூரில் சம்பளம் கேட்டு தகராறு செய்தவர்களை தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த குண்டு குறி தவறி மகனின் தலையை துளைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மங்களூரு அருகே மோர்கன்ஸ்கேட் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் பிரபு. டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ராஜேஸ் பிரபு தன்னிடம் வேலை செய்து வரும் டிரைவர்கள், கிளீனர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக ராஜேஸ் பிரபுவுக்கும், டிரைவர்கள், கிளீனர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அலுவலகத்தில் இருந்த ராஜேஸ் பிரபுவிடம் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் சம்பளம் கேட்டு தகறாறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த ராஜேஸ் பிரபு-வின் 15 வயது மகன் மீது அவர்கள் தாக்குதல் நடத்தவே  மகனை காப்பாற்றுவதற்காக ராஜேஸ் பிரபு தனது துப்பாக்கியால் கிளீனரை சுட்டுள்ளார். ஆனால் அந்த குண்டு குறி தவறி மகனின் தலையை துளைத்துள்ளது. இதையடுத்து மிகவும் ஆபத்தான நிலையில் ராஜேஸ் பிரபுவின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.