ராமநாதபுரம் அருகே உள்ள எம் எஸ் கே நகர் கிராமம் சேர்ந்த பாலகணேஷ் கார்த்திகை செல்வி தம்பதிக்கு 5 வயதில் சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா ஆகிய இரட்டை பெண் குழந்தை உள்ளது. இதில் சாய் தீப்தி பாட்டியுடன் வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை பாட்டி எழுந்து பார்த்தபோ சிறுமி சாய் தீப்தியை காணவில்லை என அக்கம் பக்கம் அருகில் உள்ள ஊரணி போன்றவற்றில் தேடியுள்ளனர். சிறுமியை காணாததால் அச்சமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து தீவிரமாக தேடி வந்தனர். ஐந்து வயது சிறுமியான சாய் தீப்தி அதிகாலை முதல் காணாமல் போன நிலையில் சிறுமி பக்கத்து வீட்டில் உள்ள கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டர். சிறுமியின் உடலைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு பதட்டத்தை மேம்படுத்தி விடுவது உடலை மீட்ட போலீசார் பிரத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையை தொடங்கிய போலீசார் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியின் உயிரிழப்பில் திடீர் திருப்பமாக, சிறுமியின் தாய் மாமாவின் மனைவி சிறுமியை கொலை செய்து போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐந்து வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தாய் மாமாவின் மனைவி சிறுமியை பொறாமையில் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இரட்டை சகோதரிகளான சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு விடுமுறை நாட்களில் தனது பெற்றோருடன் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு மதுரையில் இருந்து செல்வி தனது இரு மகள்களையும் வார விடுமுறையையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ராமநாதபுரம் எம்எஸ்கே நகரில் உள்ள அவரது தாத்தா முத்து முருகன் வீட்டிற்கு வந்த சாரு நித்திகா, சாய் தீப்தி மற்றும் செல்வி ஆகியோர் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் வீட்டிற்குள் அதிகமாக புழுக்கமாக இருந்ததால் வீட்டின் முன் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியதாக சொல்லப்படுகிறது.
காலை எழுந்து பார்த்தபோது சாய் தீப்தி காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் சாய் தீப்தி கிடைக்காததால் ராமநாதபுரம் நகர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் அளித்தனர். தீவிரமாக தேடி வந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள கிணற்றில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் குழந்தைகளின் தாய் மாமா அஜித் அவரின் மனைவி சபரிகா(21) மற்றும் எதிர் வீட்டைச் சேர்ந்த சபரி ஆகியவரை ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் வைத்து சந்தேகத்தின் போலீசார் நடத்திய விசாரணையில் சபரிகாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும், அந்த குழந்தை மாற்றுத்திறனாளி என்பதாலும், விடுமுறை நாட்களில் செல்வி தனது மகள்களுடன் அவரது அம்மா வீட்டிற்கு வரும் போது அவரது தாத்தா, பாட்டி (சபரிகாவின் மாமனார், மாமியார்) சாரு நித்திகா, சாய் தீப்தி இருவர் மீதும் அதிகம் பாசம் காட்டி வருவதுடன், குழந்தைகளுக்கு தங்க நகை, பொருளாதார உதவிகள் அதிகமாக செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத சபரிகா அந்த குழந்தைகள் மீது நீண்ட நாட்களாக பொறாமையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாய் தீப்தியை சபரிகா கொலை செய்யும் நோக்கோடு தோளில் போட்டுக் தூக்கி சென்று அருகில் இருந்த கிணற்றில் போட்டு கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த இரட்டை குழந்தைகளுக்கு ஓரிரு மாதங்களில் காதணி விழா நடத்த இருப்பதாகவும் அதற்கு தாய்மாமன் சீராக அதிக பவுன் தங்க நகைகள் போட வேண்டும் என சபரிகாவின் மாமியார் கூறிவந்ததும் சபரிகாவுக்கு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இரட்டை பெண் குழந்தையாக வளர்ந்து சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் அதிக பாசத்தோடு வளர்த்து வந்த நிலையில், அதில் ஒரு குழந்தையின் இழப்பு அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.