க்ரைம்

Pay tm - மூலம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

Malaimurasu Seithigal TV

பே டி எம் வாயிலாக பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களின் பே எடி எம் கணக்கிலிருந்து தவறுதலாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்வதற்கு ஒன்று என்ற பட்டனை அழுத்துமாறும் கூறியுள்ளனர்.

இதனை நம்பி  ஜானகிராமன் பட்டனை அழுத்தியதும் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 4 ஆயிரத்து 940 ரூபாய் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சுதாரித்துக் கொண்ட ஜானகிராமன் பே டி எம்மை தொடர்பு கொண்டு தகவல் அளித்த நிலையில், தற்போது காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார்.