Palayamkottai POCSO case Palayamkottai POCSO case
க்ரைம்

மகளின் கண்முன்னே கள்ளகாதலனோடு தனிமையில் இருந்த தாய்! "மகளையும் திருமணம் செய்து வைக்க சொல்லி தொந்தரவு"

மீனா தனது 14 வயது மகள் கண்முன்னே அடிக்கடி தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்துவந்துள்ளார்.

Vinvizhi Leninton

பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துராமன். இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி மீனா (வயது 42). இந்த தம்பதிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்பட 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கக்கன் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மீனாவுக்கு பாளை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24) என்ற டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, அடிக்கடி மீனாவும், மணிகண்டனும் தங்களது வீட்டிலேயே யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். சில நேரங்களில் மீனா தனது 14 வயது மகள் கண்முன்னே அடிக்கடி தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மணிகண்டன் அடிக்கடி மீனாவின் 14 வயது மகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் தாய் கண் முன்னேயே 14 வயது சிறுமியை மணிகண்டன் பாலியல் தொந்தரவும் செய்துவந்துள்ளார்.

ஆனால் இந்த அத்துமீறல் குறித்து அறிந்தும் சிறுமியின் தாய் மீனா எதுவுமே தட்டிக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. தாய் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், சிறுமி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும், சிறுமியை மீட்டு நடந்தது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறுமி காவல்துறையினரிடம் தன் தாயின் கள்ளக்காதல் குறித்தும், கள்ளக்காதலன் சிறுமியை திருமணம் செய்ய வற்புறுத்தியது குறித்தும், அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததையும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுமியின் தாய் மீனா மற்றும் அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.