க்ரைம்

டிப்பர் லாரி மீது பைக் மோதி விபத்தில் தாய், குழந்தை பலி...

ஊத்தங்கரை அருகே டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தாய், குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி | ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முரளி (28). கூலித் தொழிலாளியான இவரது மனைவி வேழ்வி(22) என்பவருக்கும் ஒரு ஆண் குழந்தை சித்தர்த்(2).

இவர்களுடன், தனது இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி வரும் பொழுது கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை துறிஞ்சிப்பட்டி கூட்ரோடு அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே முரளி அவருடைய மனைவியும் கைக்குழந்தையும் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோன்று பின்னாடி வந்த வாகனமும் இறந்து போனவர்கள் மீது வண்டி ஏறிச் சென்றுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் காவல்துறையினர் இணைந்து இறந்து போன இரு உடல்களை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பலத்த படுகாயம் அடைந்த முரளி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் தாயும் குழந்தையும் இறந்த சம்பவம் சாமல்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.