accust arrest  
க்ரைம்

“சொந்த மகளை ஆண் நண்பருடன் சேர்ந்து நரபலி கொடுத்த தாய்” - பிறப்புறுப்பில் மரக்கட்டை நுழைத்த கொடூரம்.. நடுக்காட்டில் நடந்த காளி பூஜை!

ஆண் நண்பரான பீம் ராம் உதவியுடன் 12 வயது சிறுமியை காட்டுக்குள் அழைத்து சென்ற...

Mahalakshmi Somasundaram

ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயதுடைய ரேஷ்மி தேவி. இவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகளும் 11 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் ரேஷ்மி தேவியின் கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே ரேஷ்மி தனது குழந்தைகளுடன் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வசித்து வந்திருக்கிறார். இத நிலையில் 11 வயது மகனுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு பல இடங்களில் மறுத்தும் பார்த்தும் குணமடையாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அக்கம் பக்கத்தினர் அறிவுரை படி ரேஷ்மி தேவி தனது 11 வயது மகனை சாந்தி தேவி என்ற மந்திரவாதியிடம் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது அந்த சிறுவனை அமர வைத்து பூஜைகளை மேற்கொண்ட சாந்தி தேவி உங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் மகளால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மகனின் உடல்நலம் குணமடைய காளிதேவிக்கு சிறுவனின் அக்காவான கன்னி பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த ரேஷ்மி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

மேலும் படிக்க : இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த பயங்கரம்

பின்னர் கடந்த (மார்ச் 24) ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பரான பீம் ராம் உதவியுடன் 12 வயது சிறுமியை காட்டுக்குள் அழைத்து சென்ற ரேஷ்மி மாத்திரவத்துக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சாந்தி தேவி சிறுமியின் பிறப்புறுப்பில் மரக்கட்டையை நுழைத்து தலையில் அடித்து அவரது ரத்தத்தை எடுத்து பூஜை செய்திருக்கிறார். தொடர்ந்து சிறுமியை அடித்து கொலை செய்து அதே இடத்தில் சரியாக பள்ளம் தோண்டாமல் புதைத்து விட்டு தப்பி சென்றனர்.

மேலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரேஷ்மி தேவி தனது மகளை காணவில்லை எனவும் பக்கத்துக்கு வீடு வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரளித்திருக்கிறார். எனவே வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்த போது அவர் சிறுமி கடைசியாக பீம் ராம் உடன் சென்றதை கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் பீம் ராமை கைது செய்து விசாரணை செய்ததில் தாயே பெற்ற மகளை நரபலி கொடுத்த சம்பவம் தெரியவந்தது. இதன் காரணமாக ரேஷ்மி, சாந்தி மற்றும் பீம் ராமை கைது செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.