மகனுடன் தகாத உறவில் இருந்த தாய்  மகனுடன் தகாத உறவில் இருந்த தாய்
க்ரைம்

ஹோட்டலில் வைத்து 14 வயது மகனுடன் தகாத உறவில் இருந்த தாய்! பலமுறை உறவில் இருந்ததாக மகன் வாக்குமூலம்

தன் மகனைத் தத்துக்கொடுத்த தாய், சமூக ஊடகங்கள் மூலம் மகனைக் கண்டுபிடித்து, அவனுடன் முறையற்ற பாலியல் உறவை வைத்துள்ளார்.

Vinvizhi Leninton

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ஏமி லூயிஸ் ஸ்வோர்ட், தனது 14 வயது சொந்த மகனைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மூன்று பாலியல் குற்ற நடத்தை வழக்குகளின் கீழ் 2009-ம் ஆண்டு ஏமி கைது செய்யப்பட்டார். அப்போது 35 வயதாக இருந்த ஏமி, திருமணமாகி ஐந்து பிள்ளைகளின் தாய். முன்பு ஒருமுறை தனது மகனை வேறொரு குடும்பத்திற்கு தத்துக் கொடுத்துள்ளார். ஆனால், தனது குழந்தையின் தத்தெடுத்த குடும்பத்தினர் அவனது முன்னேற்றம் குறித்த வழக்கமான தகவல்களைத் தரத் தவறியதால், ஃபேஸ்புக் வழியாகத் தன் குழந்தையைத் தொடர்புகொள்ள ஏமி முடிவு செய்தார். அதன் பிறகு அந்த குடும்பத்திடம் "தன் மகன் தன்னை ஒரு ஹோட்டலில் வந்து சந்திக்க வேண்டும்" என்று ஏமி கேட்டுள்ளார். அதற்கு அந்த குடும்பத்தினரும் சம்மதித்துள்ளார். அங்குதான் தனது பதின்மவயது மகனை சந்தித்து அவரோடு பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, அந்த பதின்மவயது சிறுவன், மிச்சிகனில் உள்ள கிராண்ட் ராபிட்ஸில் ஒரு தத்தெடுத்த குடும்பத்துடன் வசித்து வந்தபோது, ​​2008-ம் ஆண்டில் ஏமி முதன்முதலில் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக அவரது மகன் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்தார். அதன் பின்னர், இருவருக்கும் இடையேயான பாலியல் தொடர்பு ஒரு ஹோட்டலிலும், அருகிலுள்ள வாட்டர்ஃபோர்ட் டவுன்ஷிப்பில் உள்ள ஏமியின் உறவினர் வீட்டிலும் பாலியல் ரீதியிலான உறவு நடந்துள்ளதாக ஏமியின் மகன் விசாரணையில் கூறியுள்ளார். மேலும், முதலில் அந்த சிறுவன் தனக்கு நேர்ந்ததை ஒரு பள்ளி ஆலோசகரிடம் தெரிவித்தபோதுதான் இந்த பாலியல் வன்கொடுமை வெளியே தெரிய தொடங்கியுள்ளது. மேலும், வழக்கறிஞர் ஒருவர், "ஏமி அந்தப் பையனைப் பார்த்தபோது, ​​ஏமிக்கும் ஏதோ ஒன்று தோன்றியுள்ளது. மேலும், அது தாய்-மகன் உறவாக இருக்கவில்லை, மாறாக அது ஒரு காதலன்-காதலி உறவாக இருந்தது" என்று அவர் கூறினார். அப்பகுதியில் உள்ள சினாய் கிரேஸ் மருத்துவமனையின் ஆலோசனை மற்றும் தொடர்பு மனநல மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் ஜெரால்ட் ஷீனர் இந்த நிகழ்வு குறித்து, "இதுபோன்ற ஒரு வழக்கை இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை" என்றும், இதனால் தான் "வார்த்தைகள் வராமல் திகைத்துப்போனதாகவும்" மற்றும் அருவருப்படைந்ததாகவும் அந்த மருத்துவர் கூறியுள்ளார். மேலும், "இது ஒரு அருவருப்பான செயல். எனக்கு வார்த்தைகளே வரவில்லை, ஏனென்றால் இது நாம் இயல்புக்கு மிகவும் அப்பாற்பட்டதாகவும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் தடைசெய்யப்பட்டதாகவும் கருதும் ஒரு விஷயம். அந்த சிறுவனுக்கு ஏற்படக்கூடிய உளவியல் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடும்" என்று டாக்டர் ஷீனர் மேலும் குறிப்பிட்டார். "இது அவனுடைய முதல் பாலியல் அனுபவமாக இருக்கலாம், மேலும் அவனுடைய முதல் பாலியல் அனுபவம் மிகவும் முரண்பாடானதாகவும், ஏற்கமுடியாது ஒன்றாக இருப்பதால், அது வாழ்நாள் முழுவதும் அவன் மனதில் தங்கிவிடும்," என்று அந்த மருத்துவர் விளக்கினார்.

இந்த வழக்கு குறித்து ஏமியின் வழக்கறிஞர், "ஏமி நிரபராதி என்ற அனுமானத்தை நிலைநிறுத்துகிறார்" என்றும், இரத்த உறவு முறைகேடு குற்றச்சாட்டுகள் "அவரை மிகவும் வருத்திய ஒன்றாகி இருந்தன" என்றும் வாதிட்டார். மேலும், இந்த வழக்கில், 2010-ல் "தன் மகன் தனக்கு எதிராக சாட்சியம் அளிக்க வேண்டியிருக்காது" என்பதற்காக, ஏமி தன் குற்றத்தை அவரே ஒப்புக்கொண்டார். அவருக்கு ஒன்பது முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் தன் பிள்ளைகளிடமும் சகோதரியிடமும் வருத்தம் தெரிவித்து, "நடந்த எல்லாவற்றிற்கும் நான் மிகவும் வருந்துகிறேன் என்று கூறி சென்றுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.