prison 
க்ரைம்

முன் பகையால் நடந்த கொலை!! பீகார் இளைஞருக்கு ஆயுள் தண்டனை!!

கொலை சம்பவம் தொடர்பாக முகமது கலாம் அளித்த புகாரில் சென்னை அண்ணா சாலை காவல்துறை வழக்கு பதிவு செய்து பின்னர் தலைமறைவாக இருந்த..

Saleth stephi graph

முன் பகை மற்றும் மது குடித்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் பீகாரைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 18 வது உதவி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது கலாம் மற்றும் இவரின் சகோதரர் முகமது இஜாஜ் இருவரும் சென்னை ராயப்பேட்டையில் தங்கி அங்குள்ள சிக்கன் கடையில் வேலை செய்து வந்தனர். அதே கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அலி உசேன்  என்ற குட்டி என்பவரும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் முகமது இஜாஜ் மற்றும் அலி உசேன் இருவரும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்படும் எனவும் தெரிகிறது.

இந்நிலையில் அலி உசேன் வாங்கி வைத்திருந்த மதுபானத்தை முகமது இஜாஜ் கூடித்தாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது நிலையில் முகமது இஜாஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேத அலி உசேன் கொலை செய்தான்.

கொலை சம்பவம் தொடர்பாக முகமது கலாம் அளித்த புகாரில் சென்னை அண்ணா சாலை காவல்துறை வழக்கு பதிவு செய்து பின்னர் தலைமறைவாக இருந்த அலி உசேன் ஆந்திர மாநில விஜயவாடாவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை 18 ஆவது உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவத்சன் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்ப்பட்டுள்ளது. எனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் 6 ஆயிரத்து 500  அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.