women commited suicide  
க்ரைம்

“ஸ்ரீ என்ன மன்னிச்சிருங்க… எறும்புகளால தான் இந்த முடிவ எடுத்தேன்” -தெலுங்கானாவில் இளம்பெண் தற்கொலை!!

மனிஷா அவரது சொந்த ஊரான மஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனைகள் ....

மாலை முரசு செய்தி குழு

மனிதர்களுக்கு இயல்பிலையே சில விஷயங்கள் குறித்து அச்சமும், அருவருப்பும் இருக்கும். சிலருக்கு இருட்டு, உயரம், தண்ணீர், கடல், நாய், பாம்பு இப்படி ஏதோ ஒன்றின் மீது ஏற்படக்கூடிய பயத்திற்கு ‘போபியா’ என்று பெயர். இவை சில நேரங்களில் மருத்துவ ரீதியாக சமநிலைக்கு கொண்டு வரக்கூடியவை, ஆனாலும் சில நேரங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது. 

தெலங்கானாவில், எறும்புகள் மீதான பயம் காரணமாக  25 வயது இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ காந்த், இவரின் மனைவி மனிஷா (25) இவர்களுக்கு 3 வயதுடைய பெண் குழந்தைக்கு ஒன்றும் உள்ளது. மனிஷாவுக்கு சிறுவயது முதல் எறும்புகள் மீது கடுமையான பயம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயத்தை உளவியல் ஆய்வாளர்கள், மிர்மெகோஃபோபியா என்று அழைக்கின்றனர். 

இதற்காக, மனிஷா அவரது சொந்த ஊரான மஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனைகள் (கவுன்சிலிங்) பெற்று வந்துள்ளார். மேலும் தொடர் சிகிச்சையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த நவ.4 ஆம் தேதி அன்று மனிஷாவின் கணவர் ஸ்ரீகாந்த் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார், தான்  வீட்டைச் சுத்தம் செய்யப்போவதாகக் கூறி அவரது குழந்தையை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார் மனிஷா. ஆனால் மாலை வேலை முடிந்து வீடுத் திரும்பிய அப்பெண்ணின் கணவர் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துள்ளார். அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் மனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த  காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர்கள்  வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், “என்னை மன்னித்துவிடுங்கள் ஸ்ரீ, என்னால் இந்த எறும்புகளுடன் வாழ முடியாது” எனக் கூறியுள்ளார். 

எறும்புகள் மீதான பயத்தால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.