க்ரைம்

தாய், குழந்தை அடித்து கொலை? கணவரிடம் விசாரணை!

மதுரையில் தாயும், சேயும் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

மதுரையில் தாயும், சேயும் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரான்சிஸ் அருளானந்தம், சண்முகப்பிரியா தம்பதி. கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு காதல் மணம் புரிந்த இவர்களுக்கு ஒன்பது மாதத்தில் மயிமா என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மதுபழக்கத்திற்கு அடிமையான பிரான்சிஸ், சண்முகப்பிரியாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்முகப்பிரியாவை பிரான்சிஸ் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குழந்தை மயிமாவும், சண்முகப்பிரியாவும் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.