க்ரைம்

இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்...! சிசிடிவி காட்சியில் சிக்கிய சம்பவம்...!

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் நேற்று இரவு வீட்டு வாசலில் உள்ள இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி பகுதியில் கடந்த சில நாட்களாகவே இருசக்கர வாகனம் திருடப்பட்டு வருகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு உடன்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சுல்தான்புரம் பகுதிக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அசன் என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றனர்.

இதுகுறித்தான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடன்குடி பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவு நேர ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.