க்ரைம்

தொடர்ந்து இரு வீடுகளில் கைவரிசையை கட்டிய மர்ம நபர்கள்...!

Malaimurasu Seithigal TV

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ரபீக் நகர் பகுதியில் குடியிருக்கும் ஷாஜிதா மற்றும் ஜெய வீரன் ஆகிய இருவரது குடும்பத்தாரும் வெவ்வேறு காரணங்களுக்காக வெளியூர் சென்றிருந்தனர். இந்த நிலையில் இருவரது வீட்டையும் நோட்டமிட்ட மர்ம நபர்கள் முன்பக்க கதவுகளை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 28 சவரன் தங்க நகையும் 8 லட்ச ரூபாய் பணம், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவுகள் உடைந்து இருப்பதை கண்டு இரு வீட்டாரின் உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் இருவீட்டாரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது பணம், நகைகள் திருடு போனது தெரிய வந்தது. அதில் ஜெய வீரன் என்பவரது வீட்டில்  வைக்கப்பட்டு இருந்த 11 சவரன் தங்க நகை ஐந்து லட்சம் பணம், வெள்ளிப் பொருட்கள் திருடு போயுள்ளது. இதேபோன்று ஷாஜிதா வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் தங்க நகை, 3 லட்சம்  பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாலாஜா காவல்துறையினரிடம் இரு வீட்டின் உரிமையாளர்களும் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.