க்ரைம்

25 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் யும், கேமராவையும் அலெக்கா தூக்கி சென்ற மர்மநபர்கள்!! போலீசாரிடம் சிக்கினார்களா?

25 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திஜாரா நகரில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அதில் லட்சக்கணக்கான பணம் இருப்பதை நோட்டமிட்டிருந்த மர்மநபர்கள்,  நேற்றுமுன்தினம் இரவு ரூ.25.83 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்துச் லாவகமாக கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அதனுடன், அந்த மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அவர்கள் கழற்றி கொண்டு சென்றுவிட்டனர்.

பின்னர் இது குறித்து அறிந்த வங்கி நிர்வாகம், இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையாக குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்துக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள பிற கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.