க்ரைம்

உண்டியல் திருட்டின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்...

நாகை அருகே கோவிலின் முகப்புப் பகுதியிலிருந்த உண்டியலை அரிவாளால் பூட்டை உடைத்து மர்ம நபர் பணத்தை எடுத்து செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Malaimurasu Seithigal TV

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் தண்ணீர்பந்தல்   அருகே பழமைவாய்ந்த அன்பழகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் முகப்பு பகுதியில் உள்ள உண்டியலை நேற்று நள்ளிரவு மழையில் மர்ம நபர் ஒருவர் சாமி கும்பிடுவது போல் சென்று அரிவாளை  கொண்டு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி உள்ளார்.

இந்த பரபரப்பு   சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த சம்பவம் குறித்து கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.