Admin
க்ரைம்

“பணம் கொடுத்தால் வீட்டுக்கு வருவேன்” - குடும்பம் நடத்த பணம் கேட்ட மனைவி.. பிளேடால் கழுத்தை அறுத்துவிட்டு போலீசில் சரணடைந்த கணவன்!

அப்போது மனைவி தெய்வானை குடும்பம் நடத்த சரியாக பணம் கொடுத்தால் மட்டும் வீட்டுக்கு வருவேன் இல்லையெனில் நான் என் தாய் வீட்டில் வாழ்ந்து கொள்கிறேன்.

Mahalakshmi Somasundaram

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள புதூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தெய்வானை என்பவருடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பிறகு நாகராஜ் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு செலவு செய்யாமல் தேவையற்ற செலவுகளை செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மனைவி தெய்வானையை கணவர் நாகராஜ் பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்துள்ளார்.

இதனிடையே நாகராஜன் மனம் மாறி மனைவியிடம் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியின் தாய் வீட்டிற்கு நேரில் சென்று பேசியுள்ளார். அப்போது மனைவி தெய்வானை குடும்பம் நடத்த சரியாக பணம் கொடுத்தால் மட்டும் வீட்டுக்கு வருவேன் இல்லையெனில் நான் என் தாய் வீட்டில் வாழ்ந்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனால் மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நாகராஜ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை பேருந்து ஏறுவதற்காக மனைவி தெய்வானை பள்ளிபாளையம் அடுத்த புதூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளர். அப்போது கணவர் நாகராஜ் மீண்டும் தனது மனைவியிடம் சென்று சேர்ந்து வாழ்வது தொடர்பாக பேசியுள்ளார். அதற்கு மனைவி உடன்படாததால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிவிட்டார். இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தெய்வானையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் நாகராஜ் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று “நான் மனைவியின் கழுத்தை அறுத்து விட்டேன் என்னை கைது செய்யுங்கள்” என கூறி காவல் நிலையத்தில் தற்போது சரணடைந்து உள்ளார். கழுத்து அறுக்கப்பட்டுள்ள நிலையில் மனைவி தெய்வானை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு ஐந்து தையல்கள் வரை போடப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .இது குறித்து தொடர்ந்து பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.