nellai ex si murder news Admin
க்ரைம்

நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை - போலீசார் சுட்டு பிடித்த சம்பவம்!

இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Anbarasan

திருநெல்வேலி டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் பிஜிலி (வயது 60). இவர் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதோடு, நெல்லை டவுனில் உள்ள பள்ளிவாசலில் முத்தவல்லியாக (மேற்பார்வையாளராக) பணியாற்றி வந்தார்.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஜாகீர்உசேனுக்கும், டவுன் தொட்டிபாலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக் (வயது 35) என்பவருக்கும் இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

கொலைச் சம்பவம்:

சம்பவத்தன்று, தொழுகையை முடித்து வீடு திரும்பிய ஜாகீர்உசேன் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஜாகீர்உசேன் உயிரிழந்தார்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை:

சம்பவத்திற்குப் பிறகு, நெல்லை டவுன் போலீசார் கிருஷ்ணமூர்த்தி, அவரது தம்பி கார்த்திக், அவரது மனைவி மற்றும் அண்ணர் அக்பர்ஷா ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நெல்லை கோர்ட்டில் சரணடைந்தனர்.

மேலும் படிக்க: அழகான பெண்கள்.. ஆபத்தான முடிவுகள்.. தலை சுற்ற வைக்கும் "Honey Trap"! கவுந்துடாதீங்க!

கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தனிப்படை போலீசார் அவர்களை தேடிவந்தனர். பின்னர் ரெட்டியார்பட்டி மலையில் பதுங்கி இருந்த கிருஷ்ணமூர்த்தியை போலீசார் பிடிக்க முற்பட்டனர்.

அப்போது, கிருஷ்ணமூர்த்தி கைபிடித்திருந்த அரிவாளால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலத்தை தாக்க முயன்றார். தன்னை பாதுகாத்துக்கொள்ள போலீசாரான அருணாசலம், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கிருஷ்ணமூர்த்தியை காலில் சுட்டு கைது செய்தார்.

சிகிச்சை மற்றும் வழக்குப்பதிவு:

காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசாரான அருணாசலம் இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, கிருஷ்ணமூர்த்தி மீது கொலை முயற்சி, அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதலீட்டோடு இணைந்த ஆயுள் காப்பீட்டு திட்டம் - எக்கச்சக்க லாபம் தரும் AEA திட்டம் பற்றி தெரியுமா?

இதேவேளை, தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நுருன்னிஷா, திருவனந்தபுரம் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கேரளா மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.

இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் எனவே தீவிர விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் நூருன்னிஷா கைது குறித்து கேட்டபோது, பல்வேறு தகவல்களின் அடிப்படையில் தனிப்படையினர் இவரை தீவிரமாக தேடி வருவதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமனி தெரிவித்தார்.

இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்