க்ரைம்

“கல்யாணம் பண்ணிக்கிறேன்” என அழைத்த காதலன்.. நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த நிலையில் சம்பவத்தன்று திருமண ஆசை வார்த்தை கூறி தனது “அக்கா வீட்டிற்குச் போகலாம்” என முனீஸ்வரன் அந்த சிறுமியை அழைத்துள்ளார்

Muthu Lakshmi

2022ம் ஆண்டு நெல்லை பிளஸ் 2 மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் 3 பேர் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த பிளஸ்2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேரை குற்றவாளிகள் என நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது அறிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நெல்லையில் உள்ள தேவாலயத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றபோது, விளாத்திகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (27) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரண்டு வாரங்களாக செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று திருமண ஆசை வார்த்தை கூறி தனது “அக்கா வீட்டிற்குச் போகலாம்” என முனீஸ்வரன் அந்த சிறுமியை அழைத்துள்ளார். பின்னர் தனது பைக்கில் அழைத்து கொண்டு அக்கா வீட்டிற்கு செல்லாமல் கட்டாயப்படுத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று எண்ணி முனீஸ்வரன் அழைத்து வந்ததாக மாணவி நினைத்திருந்தார். ஆனால் சிறுமியை முனீஸ்வரன் தனிமையில் அழைந்து சென்று, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் அங்கு முனீஸ்வரனின் நண்பர்களான நெல்லை, கொக்கிரகுளம், கீழ வீரராகவபுரத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி (27), முருகேசன் (27) ஆகியோர் இருந்தனர். அவர்களும் மாணவியை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் அதிரடியாக கைது செய்தது காவல்துறை. இதில் சின்னக்குட்டி மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முனீஸ்வரன், சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுரேஷ்குமார்  உறுதிபட அறிவித்துள்ளார்.

குற்றவாளிகள் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கோ அல்லது சாட்சிகளுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் வரக்கூடாது என்பதற்காகவும், அவர்கள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காகவும் 3 பேரையும் உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்களை நீதிமன்றம் இன்று வெளியிட உள்ளதாகவும் நீதிபதி அறிவித்தார். அதன்படி இன்று மூன்று பேரும் போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி சுரேஷ் குமார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீதும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்து இந்த வழக்கில் சின்னத்துரைக்கு மரண தண்டனையும், முனீஸ்வரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், முருகேசனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழக்கினார். மேலும் மூன்று பேருக்கான அபராத தொகை என்பது அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீசார் அந்த மூன்று பேரையும் பாதுகாப்பாக அழித்து சென்று நீதிமன்றத்தில் உள்ள கைதிகள் காத்திருப்பு அறைக்கு அழைத்துச் சென்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளனர் நெல்லை நீதிமன்றத்தில் போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.