க்ரைம்

புதுமணப்பெண் தற்கொலை முயற்சி... போலீசார் விசாரணை...

ஸ்ரீபெரும்புதூா் அருகே புது மணப்பெண் உடல் எாிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் தாமரை தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி வ/27. இவர் கடந்த 4மாதங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கணவரை பிரிந்து காஞ்சிபுரம் வெள்ளகேட் தாமரை தாங்கள் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டில் இருந்து வந்த நிலையில் இன்று பிரியதர்ஷினி தன்னுடைய அம்மாவிடம் சென்னையில் உள்ள கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி பென்னலூர் பஸ் நிறுத்தம் பின்புறம் பிரியதர்ஷினி 90% தீக்காயங்களுடன் மீட்டுள்ளனர்.

பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கிடந்த பெட்ரோல் கேன், தங்க தாலி, கைப்பை, செல்போன் ஆகியவை கைப்பற்றி, பிரியதர்ஷினி தானாகவே பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டாரா? அல்லது யாரேனும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.