க்ரைம்

இறந்த நண்பருக்காக தானே தற்கொலை செய்து கொண்ட உயர்ந்த மனிதர்...

நண்பர் உயிரிழந்ததால் முதியவர் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருப்பூர் | மன்னரை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (75) என்பவர் தனது நண்பருடன் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அவர் கடந்த வாரம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனால் சோகத்தில் இருந்த சுப்பிரமணி இன்று காலை நடைபயிற்சியின் போது திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.