க்ரைம்

கிருஷ்ணகிரியில் இளம் பெண்களை விரட்டி வந்த வட மாநில தொழிலாளர்களுக்கு தர்ம அடி! 

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் மூன்று பேர் இளம்பெண்களை விரட்டி வந்ததாக கூறி கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர் பொது மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சூளேப்பள்ளி கிராமத்தில் I M என்னும் ஸ்டீல் பைப் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சூளேப்பள்ளி கிராம வழியாக வீட்டிற்க்கு நடந்து சென்ற 2 உள்ளூர் இளம்பெண்களை தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

வடமாநில இளைஞர்கள் உள்ளூர் இளம் பெண்களை துரத்தி சென்றபோது அந்த இளம் பெண்கள் கூச்சலிட்டவாறு பயந்து ஓடிச் சென்றுள்ளனர். இளம் பெண்களின் அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பெண்களை துரத்தி வந்த 3 வடமாநில இளைஞர்களை பிடித்து, அந்த தொழிற்ச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் அங்கு கிராம மக்களால் கட்டி வைத்திருந்த வடமாநில இளைஞர்களை மீட்டு காவல் நிலையத்திற்க்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் சூளேப்பள்ளி கிராமத்தில் நேற்று பரபரப்பு நிலவியுள்ளது.