விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு செவிலியர், நோயாளி ஒருவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதோடு, பின்னர் அவர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்று பொய்யாகக் கூறிய குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2022-ஆம் ஆண்டில் மன்ரோ கவுண்டி போதைப்பொருள் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, நோயாளியுடன் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மெலிசா நட்சன் பொது அலுவலகத்தில் அவருடன் முறைகேடாக உடலுறவில் இருந்தது மற்றும் அதிகாரியின் பணியைத் தடுத்தது ஆகிய குற்றங்களுக்காகக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். அவரது செயல்கள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அந்த செவிலியர் ஆரம்பத்தில் நோயாளி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பின்னர் நோயாளிக்கு போதைப்பொருள் பழக்கத்திற்கான மருந்தைக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நட்சன், நோயாளியுடன் இருவரும் பரஸ்பர விருப்பதிலேயே பாலியல் உறவில் இருந்துள்ளனர் என்றும் ஆனால், தனக்கோ அல்லது தன் குடும்பத்தினருக்கோ தீங்கு விளைவிப்பார் என்று அஞ்சியதால், அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பொய் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நோயாளி பின்னர் அனுப்பிய குறுஞ்செய்திகளில், நட்சன்தான் நோயாளிக்கும் தனக்குமான பாலியல் உறவை தொடங்கினர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, தாக்குதல் குறித்துப் பொய் சொன்னதை நட்சன் பின்னர் ஒப்புக்கொண்டாள். "திருமதி நட்சனால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு ஆழமானதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும். அவர் ஒரு நோயாளிக்கும் செவிலியருக்கும் இடையிலான புனிதமான நம்பிக்கையை மீறியது மட்டுமல்லாமல், நோயாளி மீது பாலியல் வன்கொடுமைப் பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி அதை மேலும் மோசமாக்கினார்," என்று மாவட்ட வழக்கறிஞர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.