க்ரைம்

செல்போனில் பிரசவம் பார்த்த செவிலியர்... தாய், சேய் பலி...

Malaimurasu Seithigal TV

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆரம்பர சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செல்போன் மூலம் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியான ஆலனூர் கிராமத்தைச் சார்ந்த பாக்யராஜ், தனது மனைவி மல்லிகாவை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு  சேர்த்துள்ளார்.

ஆனால் மருத்துவர் இல்லாததால் செவிலியர் ஒருவர் மருத்துவரை தொடர்பு கொண்டு செல்போன் மூலம் பிரவசம் பார்த்த நிலையில் மல்லிகா மற்றும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.

செவிலியரின் தவறான சிகிச்சையே தாய் சேய் உயிரிழப்புக்கு காரணம் என கூறி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அவரது உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.