க்ரைம்

பிறந்து 14 நாட்கள் ஆன பெண் குழந்தையின் கட்டை விரலை வெட்டி எடுத்த செவிலியர்கள்...

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூர் மாவட்டம்  காட்டூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் அவருக்கு கடந்த 25ஆம் தேதி தஞ்சை இராசமிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறைமாதத்தில் பிறந்ததால் வயிற்றில் பிரச்சினை இருப்பதாகவும் எனவே தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று வீடு திரும்புகையில் கையில் இருந்த ஊசியை அகற்றுவதற்கு பதிலாக  கையின் கட்டைவிரலை செவிலியர்கள் வெட்டியதால் விரல் துண்டானது. மேலும், மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்காததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.